வணங்கான் படம் பாலாவுக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் : இயக்குனர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

பாலா இயக்கத்தில் வணங்கான் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. முதலில் சூர்யா நடிப்பில் தொடங்கிய அந்த படம் தொடங்கிய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா அதில் இருந்து விலகிவிட்டார்.

 

அதன் பிறகு அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து பாலா படத்தை இயக்கி இருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு வணங்கான் ட்ரைலர் வெளியான நிலையில் அதற்கு 2.8 மில்லியன் பார்வைகள் தற்போது வரை கிடைத்து இருக்கிறது

 

தற்போது வணங்கான் படத்தினை முதலில் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் எப்படி இருக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

 

பாலாவுக்கு மிகப்பெரிய கம்பேக் படம் இது. மொத்த குழுவும் ஒரு நம்பமுடியாத மேஜிக் செய்திருக்கிறது என சுரேஷ் காமாட்சி கூறி இருக்கிறார். அவரது பதிவு இதோ..