விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயார் நிலையில் இருக்கிறது. இந்தப்படத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து இருந்தார்.அதில் அவருக்கு பெரிய பேர் கிடைத்தது.
இந்தப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கும் நிலையில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில், இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், நாளை காலை 11 மணிக்கு இந்தப்படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Most anticipated update is here!
Director #VetriMaaran 's #ViduthalaiPart2 First Look launch tomorrow @ 11:30 AM. StayTuned
An @ilaiyaraaja Musical @VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre @anuragkashyap72… pic.twitter.com/X2rzGd7IZ3
— Actor Soori (@sooriofficial) July 16, 2024
முன்னதாக, இந்தப்படத்தின் முதல் பாகம் 30 -03-2024 அன்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரம் சிலர் விடுதலை படம் குறித்தான தங்களது விமர்சனங்களையும் பதிவிட்டனர். இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் இந்த படத்திற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், ” இந்த மாதிரியான படத்தை எடுப்பதில் இருக்கக்கூடிய ஈஸியான விஷயம் என்னவென்றால் இந்த மாதிரியான ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதே. அது ஒரு தனி ஆளு அல்லது ஒரு சின்ன குழுவோ எடுக்கக்கூடிய முடிவு. நாங்கள் இவ்வளவு தூரம் படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம் என்றால் யாரும் சொல்லி எடுக்கவில்லை. உங்களுக்கு இந்த கதையை சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதற்காக நாங்கள் இந்த கதையை சொன்னோம். அதற்கான கஷ்டங்களை ஏற்றுக்கொண்டோம்.
வெற்றிமாறன் நெகிழ்ச்சி
இந்த மாதிரியான ஒரு படத்தை பத்திரிக்கையாளர்கள் சப்போர்ட் செய்ய வேண்டும் என்று நினைத்ததே இதில் முக்கியமான விஷயம். இந்த படத்தில் நிறைய குறைகள் இருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு இந்த படத்தினுடைய உள்நோக்கத்தை புரிந்துகொண்டு, இந்த படத்தை விமர்சனம் செய்ததற்கு நன்றி. இந்த படத்தை இவ்வளவு அபரிவிதமாக கொண்டாடி ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி.
நல்லவர்களை கதாநாயகர்களாக வைத்து படங்கள் வந்து வெகு நாட்களாகி விட்டது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னர், ராஜா சார் தான் இந்த படத்தை பார்த்து இந்த படம் ஒரு மிக முக்கியமான படம் என்று சொன்னார். அத்துடன் உனக்கு என்ன மாதிரியான இசை வேண்டுமோ அதை நான் செய்து தருகிறேன் என்று சொல்லி முழுவதுமாக என்னை ஊக்குவித்தார். அதற்காக நான் இந்த இடத்தில் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று பேசினார்.