முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.
அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் சென்னையில் நடந்த திருவேங்கடம் என்கவுண்டர் குறித்து கேள்வி கேட்க, அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் காரில் புறப்பட்டு சென்றார்.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை உலகமே பார்த்து பார்த்து ரசித்தனர். இந்த திருமண விழாவிற்கு உலகின் மிகவும் பிரபலமான அனைத்து பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா, மகள் சௌந்தர்யா, மருமகன், பேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சூப்பர் டான்ஸ்: அவர் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், காலன் குடியான் என்ற பாலிவுட் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார். அவருடன் மணமகன் ஆனந்த் அம்பானி, முகேஷ் அம்பானி, அனில் கபூர், ரன்வீர் கபூர் என அனைவரும் சேர்ந்து நடனமாடினார்கள். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. ரஜினிகாந்துக்கு இப்போது 73 வயதான போதும், அதே ஸ்டைலுடன், அவர் உற்சாகத்துடன் ஆட்டம் போட்டதை ரசிகர்கள் பெருமளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் சந்திப்பு: அம்பானி திருமண விழா கோலாகலமாக நேற்று நடந்து முடிந்ததை அடுத்து இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்கள், அம்பானி வீட்டு திருமணத்தில் நடனமாடியது குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர், அம்பானி வீட்டு கடைசி கல்யாணம், ரொம்ப கிராண்டா நடந்தது, அதில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்றார். இத்தொடர்ந்து இந்தியன் 2 குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் இன்னும் படம் பார்க்கவில்லை நாளைக்கு பார்க்கிறேன் என்றார். இதைத் தொடர்ந்து மற்றொரு செய்தியாளர், என்கவுண்டர் மட்டுமே சட்டம் ஒழுங்குகிற்கு தீர்வாகுமா என்ற கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ் என்று கூறி விட்டு காரில் ஏறி சென்றார்.