Teenz திரை விமர்சனம்

ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்று பார்த்திபனின் அடுத்த ஒரு வித்தியாசமான ட்ரை தான் இந்த Teenz.

கதைப்படி 13 நண்பர்கள், தங்களுக்கு எல்லாம் தெரியும் ஆனால் பெற்றோர்கள் தங்களைப் புரிந்து கொள்ள மாட்டேங்கிறார்கள் என்று முடிவெடுத்து, ஸ்கூலை கட்டடித்துவிட்டு, எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு நண்பனின் பாட்டி வீட்டிற்கு புறப்படுகிறார்கள், அப்பொழுது அந்தப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதுதான் கதை..?

கிடா படத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கான படம் என்று பெரிதாக எதுவும் வரவே இல்லை. அந்த இடத்தை நிவர்த்தி செய்து இருக்கிறார் இயக்குனர் பார்த்திபன்.

அதேபோல் குழந்தைகள் உலகம் என்ற ஒன்று இருக்கும் வேண்டும் என்பதற்காக, குழந்தைத்தனமாக பேச வைக்கும் செயல் இந்த படத்தில் அறவே இல்லை.

13 பேரும் அவர்கள் பங்குக்கு சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

படத்தை ஒரு பேய் படம் என்று நம்பி பார்க்கும்போது, இந்தப் படத்தின் வகை வேறு என்று உணர்த்துகிறார் பார்த்திபன் இரண்டாம் பாதியில்.

இந்தப் படத்திற்கு கூடுதல் பலம் ஒளிப்பதிவு, விஷுவல் எபெக்ட்.

இமான் இந்த படத்திற்கு கொடுத்திருக்கும் பின்னணி இசை மிகவும் அற்புதம். ஆனால் பாடல்கள் சுமார் ரகம்.

படத்தின் குறையாகப் பார்ப்பது முதல் பாதியில், கதையை எங்கெங்கோ திருப்புகிறேன் என்று புரியாதபடி செய்தது. எடிட்டங்கிளும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

யோகி பாபு இந்த படத்தில் எதற்காக வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. காமெடியும் பெருசாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

பின்பாதியில் நாசா விஞ்ஞானியாக வரும் பார்த்திபன், ஒரு விஷயத்தை சொல்ல முற்படும் போது அதை முழுமையாக சொல்லாமல் பிரித்து பிரித்து சொல்வதால் சிறிது குழப்பம் ஏற்படுகிறது. இதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

ஆக மொத்தத்தில் Teenz படம், இந்த வித்தியாசமான முயற்சிக்காகவே ஒரு தடவை பார்க்கலாம்.