இயக்குனர் ஷங்கரின் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான இன்னொரு படம்.
பொதுவாகவே நாட்டில் நடக்கும் சமூகப் பிரச்சினைகள் எதாவது ஒன்றை கையில் எடுத்து அதற்கு திரைக்கதை அமைத்த ஷங்கர், இந்தப் படத்தில் நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காக திரைக்கதை அமைத்து படமாக எடுத்து இருக்கிறார். அதில் ஒரு பாதியை மட்டுமே இன்று வெளியிட்டு இருக்கிறார். மறுபாதி 2025 இல் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.
கதைப்படி சித்தார்த் பிரியா பவானி சங்கர் ஜெகன் மற்றும் பலர் சமூகத்தில் நடக்கும் அவலங்களை எல்லாம், ஒரு கதையாக உருவாக்கி யூடியூப் சேனலில் பதிவேற்றுகிறார்கள்.
ஆனால் என்ன தான் இருந்தாலும் சமூகத்தில் அவலங்கள் நிறைந்த வண்ணம் தான் உள்ளன. ஜனநாயகத்தை பணநாயகம் ஆண்டு கொண்டு தான் இருக்கிறது என்று சித்தார்த் புலம்ப, இதற்கு மாற்று வழியாக இந்தியன் தாத்தாவான கமல்ஹாசனை தேடி வரவழைக்கலாம் என்று முடிவு செய்து #comebackindian என்று ட்ரெண்டிங் செய்கிறார்கள். இதனால் கமல்ஹாசன் திரும்பவும் இந்தியாவிற்குள் வருகிறார்.
மறுபடியும் இந்தியன் part 1 போல் அனைத்தையும் எப்படி களை எடுக்கிறார் என்பதுதான் கதை.
படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிக பிரமாண்டமாக இருக்கிறது. சித்தார்த் கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் சமமான நடிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவு மிக மிக அருமையாக உள்ளது.
கதையில் பல காட்சிகளில் லாஜிக் இல்லை. சங்கர் படத்தில் லாஜிக் மிஸ்டேக்ஸ் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் லாஜிக்கை அப்படியே காற்றில் பறக்க விட்டு படம் எடுத்திருக்கிறார்.
இந்தியன் படத்தில் கமல்ஹாசனுக்கு போட்டிருந்த தாத்தா கெட்டப் மிகவும் தத்துரூபமாகவும் எதார்த்தமாகவும் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் மேக்கப்பில் continuity missing. ஒருவேளை இந்த படம் பல வருட காலங்களாக எடுத்த காரணத்தினாலோ என்னவோ..?
சங்கர் படங்களில் எப்பவுமே ஒரு அழுத்தம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அது missing.
அதேபோல் இசையும் ஒரு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், ஆனால் அனிருத்தின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலகீனம். ஒருவேளை ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கே கொடுத்திருந்திருக்கலாம்.
அதேபோல் சங்கர் படத்தில் சண்டை காட்சிகள் மிகவும் தத்ரூபமாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும், அதுவும் இந்த படத்தில் missing.
இப்படி நிறைய மிஸ்ஸிங் இருப்பதினால், நன்றாக இருக்கவேண்டிய இந்தியன் 2, சுமாராகவே உள்ளது.