துபாய் நடு வானில் பறந்த இந்தியன் தாத்தா – பட ப்ரொமோஷன் வேற லெவல்

இந்தியன் இரண்டாம் பாகம் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் .

மிகப்பெரிய பொருட்செலவில் 1996 இல் கமலஹாசன் வைத்து இந்தியன் என்ற பெயரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஷங்கர் இயக்கியிருக்கும் படம் தான் இந்தியன் 2 . லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும், கமலுடன் இணைந்து, ரகுல் ப்ரீத் சிங், விவேக், சித்தார்த், பிரியா பவானி சங்கர், மனோபாலா, எஸ்ஜே சூர்யா, உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் மொழி மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை மூன்று பாடல்கள் படத்திலிருந்து வெளியாகி உள்ளன.

இதனிடையே இந்தியன் இரண்டாம் பாகத்தின் புரமோசன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மும்பை, சிங்கப்பூர், துபாய் என மாறி மாறி படக்குழு படத்திற்கான புரமோசன் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இந்த அளவிற்கு பிரமோஷன் பண்ணுவதற்கு காரணம் என்ன என்று விசாரிக்கும் போது, இந்தியன் டு ஆரம்பித்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன என்றும், இடையில் இந்த படம் நின்றதால் மக்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்து விட்டது என்றும், அந்தக் குறைபாட்டை சரி செய்வதற்காகவே இந்த ப்ரோமோஷன் என்றும் பல குழுவினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, துபாய் நடுவானில் இந்தியன் 2 படத்திற்கான புரமோசன் செய்யப்பட்டது. ஸ்கை டைவிங் வீரர்கள் இந்தியன் 2 பட போஸ்டரை நடுவானில் பறக்கவிட்டு, அலங்கரித்தனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளனர். இது தற்சமயம் மிகவும் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.