வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்தி வெளியான படம் கேப்டன் மில்லர்.இந்த படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில்,தற்போது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது கேப்டன் மில்லர் திரைப்படம் . லண்டனில் தேசிய திரைப்பட விழா நடைபெற்றது. அதில் அயலக மொழிப்படத்துக்கான பிரிவில் தனுஷின் கேப்டன் மில்லரும் தேர்வாகியிருந்தது.
இந்நிலையில், நேற்று லண்டனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில், சிறந்த அயலக மொழிப்படம் என்ற விருது கேப்டன் மில்லருக்கு கிடைத்துள்ளது. இந்தப் பிரிவில் ஜெர்மானிய படங்களான சிக்ஸ்டி மினிட்ஸ், தி ஹார்ட்பிரேக் ஏஜென்ஸி உட்பட மேலும் சில படங்களும் போட்டியிட்டன. ஆனால், கேப்டன் மில்லர் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Best foreign language Film 2024
Winner is CaptainMiller 🥺❤@dhanushkraja @gvprakash @SathyaJyothi @sundeepkishan pic.twitter.com/CMWIaRhpjT
— Aᴋᴀsʜ (@akashhhhx) July 3, 2024
இந்த பிரிவில் கேப்டன் மில்லர் மற்றும் Bhakshak ஆகிய இரு திரைப்படங்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தது. You Are Not Alone: Fighting the Wolf Pack (Spain), The Parades (Japan), Red Ollero: Mabuhay is a Lie (Philippines), Sixty Minutes (Germany), The Heartbreak Agency (Germany) ஆகிய படங்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.இதில் Best Foreign Language Film 2024 என்கிற விருதை கேப்டன் மில்லர் திரைப்படம் கைப்பற்றியுள்ளது.