நாளை வெளியாக வேண்டிய கல்கி படத்தின் ‘பைரவா’ பாடல் இன்றே வெளியானது

பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது ‘கல்கி 2898 ஏ.டி’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கிய இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப்படம் ஜூன் 27-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும், டிரைலர்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தையும் ஈரத்து உள்ளது.

இந்த நிலையில் கல்கி படத்தில் ‘பைரவா’ எனும் பாடல் ஜூன் 16 வெளியாகும் என்று பட குழுவினர் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனால், பைரவா பாடல் நேற்று வெளியாகாமல் இன்று வெளியாகியுள்ளது.