இந்த பாலிவுட் நட்சத்திரத்தை வைத்து அடுத்த படம் இயக்கப் போகிறாரா..? அட்லீ

அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஜவான். இப்படம் ஷாருக்கானின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது.

ஜவான் வெற்றியை தொடர்ந்து அட்லீ முதல் முறையாக அல்லு அர்ஜுனை வைத்து இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது. இப்படத்திற்கான பணிகளில் கூட அட்லீ ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், இப்படம் கைவிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆகையால் அட்லீ – அல்லு அர்ஜுன் இருவரும் இணையப்போவது இல்லை என தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் அட்லீ அடுத்து யாரை இயக்கப்போகிறார் என கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இயக்குனர் அட்லீ அடுத்ததாக சல்மான் கானை வைத்து இயக்கப்போகிறார் என கூறுகின்றனர்.

ஷாருக்கானை தொடர்ந்து மீண்டும் ஒரு பாலிவுட் நட்சத்திரத்துடன் அட்லீ இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போகிறார்களாம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையானது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.