மகாராஜா திரைவிமர்சனம்

ஏழு வருடம் கழித்து குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் இயக்கிய படம்.

விஜய் சேதுபதிக்கு ஐம்பதாவது படம்.

ஐம்பதாவது படம் என்பதாலேயே கதையை பார்த்து பார்த்து தேர்வு செய்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியே ரெண்டு மூணு இயக்குனர்களிடம் இரண்டு மூன்று படங்கள் வேலை செய்து இருக்கிறார். அப்படி இருக்கையில் ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி வெற்றிக்கொடுத்த குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலனுக்கு ஏன் தர வேண்டும்..?

அதற்கு மிகப்பெரிய காரணம் இந்த படத்தில் உண்டு.

சலூன் கடையில் வேலை பார்ப்பவராக விஜய் சேதுபதி வருகிறார். ஒரு எதிர்பாராத விபத்தில் தனது மனைவியை இழக்க நேரிடுகிறது, குழந்தையை ஒரு குப்பைத் தொட்டி காப்பாற்றுகிறது.

அதனால் அந்த குப்பைத் தொட்டியை கடவுளாக விஜய் சேதுபதியும் அவரது மகளும் வணங்குகிறார்கள்.

இந்நிலையில் அந்த குப்பைத் தொட்டியை ஒருவர் வீட்டில் இருந்து திருடி செல்கிறார். இதை காவல் நிலையத்தில் விஜய் சேதுபதி கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். இந்த கம்பளைண்ட் எடுத்தார்களா குப்பைத்தொட்டியை கண்டுபிடித்தார்களா என்பது தான் படத்தின் மீதி கதை..?

ஒரு குப்பைத் தொட்டிக்காக ஒரு படமா என்று தான் எல்லாரையும் யோசிக்க வைக்கும் முதல் பாதியில், ஆனால் படம் பார்ப்பவர்கள் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கி இருப்பார் இயக்குனர் நித்திலன்.

படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அபாரம், மம்தா மோகன்தாஸ் வந்து சென்று இருப்பார், அபிராமி நடிப்பும் அபாரம். அனுராக் கேசயப்பின் வில்லத்தனம் மிரட்டுகிறது. நட்டி, அருள் தாஸ், முனீஸ்காந்த் ஆகியோரின் நடிப்பு கனக்கச்சிதமாக இருக்கிறது. சிங்கம் புலி நடிப்பு, நடிப்பின் உச்சம். பாய்ஸ் படம் மணிகண்டன்க்கு இந்த படம் ஒரு கம்பேக்காக இருக்கும் என்பது உறுதி.

படத்தின் ஒளிப்பதிவும் சரி, இசையும் சரி ஒரு புதிய தோனியை உருவாக்குகிறது.

படத்தின் சண்டைக் காட்சிகள் நம்மை மிரள வைக்கிறது, அதிலும் பாய்ஸ் படம் மணிகண்டன் சண்டைக்காட்சியோ மிரட்சியின் உச்சம்.

ஏழு வருடம் கழித்து ஒரு படம் கொடுத்தாலும் அந்தப் படத்தில் ஒரு ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்திருக்கிறார் நித்திலன்.

அப்பா தந்தை சம்பந்தமாக பல படங்கள் வந்தாலும், இந்தப் படம் வேறு மாதிரியான ஒரு உச்சத்தை தொடுகிறது.

படத்தின் திரைக்கதை அமைப்பு சில நேரங்களில் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணலாம். நன்றாக உற்று கவனிப்பவர்களுக்கு புரியும் இது எந்த மாதிரியான கதை அமைப்பை கொண்டது என்று.

ஆக மொத்தத்தில் மகாராஜா தேசிய விருது வாங்குவார்.