தீராத தாகத்துடன் தேடித்தேடி கற்றுக்கொண்டே இருந்தால் எதையும் சாதிக்கலாம்.- இசைஞானி இளையராஜா

எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் இது. இசையைக் கற்றுக்கொள்ள சென்னை வந்தபோது எனக்கும், என் அண்ணன் பாஸ்கருக்கும் அம்மா 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார். நான் பிறந்த ஊரில் எனக்கு இசை கற்றுக் கொடுப்பதற்கு யாரும் இல்லை, அதற்கான சூழலும் அங்கில்லை. இசையைக் கற்றுக்கொள்ள எங்கெங்கோ தேடித்தேடி அழைந்தேன். அன்று கிராமத்தில் இருந்து இசையைக் கற்றுக்கொள்ள எப்படி சென்னை வந்தேனோ, இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்.தினந்தினமும் கற்றுக் கொண்டேயிருக்கிறேன். இன்று வரை என்னால் இசையைக் கற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவர் தண்ணீர் வேண்டுமென்று கேட்டால் அவருக்குத் தாகத்தை ஏற்படுத்துங்கள். அவர் நிச்சயம் தண்ணீரை தேடிக் கண்டுபிடித்துவிடுவார். தீராத தாகம்தான் எதையும் கற்றுக் கொள்வதற்கான வழி. அந்தத் தாகம் இருந்தால் நீங்கள் எதையும் சாதிக்கலாம். சாதித்துவிட்டால் சாதனையெல்லாம் சாதாரணாமாகிவிடும். எல்லோரும் என்னிடம் ‘நீங்க எப்படி நல்லா இசையமைக்கிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். இசை என்பது நான் சுவாசிக்கும் மூச்சைப் போல எனக்கு இயல்பாக வருகிறது. தீராத தாகத்துடன் தேடித்தேடி கற்றுக்கொண்டே இருந்தால் எதுவும் உங்களுக்கு இயல்பாக வந்துவிடும்.”
-இசைஞானி இளையராஜா