திருமணம் எப்போது, விசால் பரபரப்பு.

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விஷால், இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். விஷால் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பு நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார். அதன் பின் இவர் செல்லமே படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளர், திரைப்பட நடிகர் சங்கத் தலைவராக இருந்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்றது. அதோட தமிழ் சினிமாவில் ‘புரட்சித் தளபதி’ என்று அழைக்கப்படும் விஷால் இப்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ரத்னம்’. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார்.இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன

இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் இன்னும் இவருக்கு திருமணம் ஆகாதது ஏன் என்று பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் விஷாலிடம் திருமணம் எப்போது?’ என்று கேட்டுக் கொண்டே வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு விஷால், அனிஷா என்பவரை காதலித்து நிச்சயதார்த்தமும் நடந்த நிலையில் திருமணம் நடைபெறவில்லை. அதேபோல் விஷால், வரலட்சுமி மற்றும் லட்சுமி மேனனுடன் காதல் கிசுகிசுவில் கூட சிக்கி இருந்தார்

தற்போது 46 வயது ஆகும் நிலையில், நடிகர் சங்கம் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் தான் திருமணம் என்று அவர் உறுதியாக இருப்பதாக பல பேட்டிகளில் கூறியிருந்தார்.  அதேபோல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட தனது கடமைகள் அனைத்தும் முடித்த பின்னர்தான் திருமணம் என்றும் கூறியிருந்தார். இப்போது விஷால் ஹைதராபாத்தில் அளித்த பேட்டியில், ‘இந்த மூன்று நடிகர்களுக்கு திருமணம் ஆன பின்னர் தான் எனக்கு திருமணம்’ என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதேபோல், அவர் குறிப்பிட்ட அந்த மூன்று நடிகர்கள் சல்மான் கான், சிம்பு மற்றும் பிரபாஸ் ஆகும். மேலும் 58 வயது ஆகும் நிலையில் சல்மான் கானுக்கு வயது திருமண வாய்ப்பே இல்லை எனவும், 41 வயதாகும் சிம்புவிற்கு அவரது வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இதேபோல் 44 வயதாகும் பிரபாஸ், சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தனது வாழ்க்கையில் ஒரு புதிய உறவு உருவாகப் போவதாக கூறியிருப்பதை அடுத்து அவரது திருமணம் மிக விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூவருக்கும் எப்பொழுது திருமணம் நடக்க, அதன் பிறகு எப்பொழுது விசாலுக்கு திருமணம் நடக்குமோ..?  என்று அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்