நடிகராக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா – புது அவதாரம்.

‘சத்யா’ படத்தின் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இயக்குனர் பாலச்சந்தரின் பள்ளிக்கூடம் என்பதால் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாமலை படத்தை இயக்கம் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அது கொடுத்த இமாலய வெற்றி அவருக்கு வீரா என்னும் நகைச்சுவை படத்தை இயக்கும் வாய்ப்பு  மறுபடியும் ரஜினியின் மூலமே கிடைத்தது. இந்த இரண்டு வெற்றிகளின் விதையாக எழுத்தாளர் பாலகுமாரனின் வசனங்களில், ஹம் என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்கின் உரிமையைப் பெற்று தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த  பாட்ஷா படத்தை இயக்கினார். அன்றைய காலகட்டங்களில் போற்றப்படக்கூடிய ஒரு சில இயக்குனர்களில் சுரேஷ் கிருஷ்ணாவும் ஒருவராக இருந்தார். மேலும் உலகநாயகன் கமலஹாசனின் 200 வது படமான ஆளவந்தான் படத்தை இயக்கியவரும் இவரே.

இதற்குப் பிறகு அவர்கள் இயக்கிய படங்கள் சுமார், தோல்வி, படுதோல்வி  என்ற நிலையிலே இருந்தாலும், இன்றளவும் தொலைக்காட்சிகளில்  சுரேஷ் கிருஷ்ணாவின் படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பாட்ஷா படத்தில் அனல் பறக்கும் வசனங்களும் சரி, அண்ணாமலை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கொடுக்கப்பட்ட அந்த டைட்டில்கள் அனைத்தும் சரி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் ஐடியா தான். இந்நிலையில் சுரேஷ் கிருஷ்ணா நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

ஏற்கனவே தெலுங்கு திரை உலகில் நடிகராக கால் பதித்த நிலையில், தற்பொழுது தமிழ் திரை உலகிலும்  கால் பதிக்க ரெடியாகி உள்ளார். அவரின் தோற்றம் அனைவரையும் கவரும் விதமாக உள்ளது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா நடிகர் சுரேஷ் கிருஷ்ணாவாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.