DADA திரைவிமர்சனம் – (3.5/5)

dada movie review in tamil

கவின், அபர்ணா தாஸ், VTV கணேஷ், பாக்யராஜ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “DADA”. இப்படத்தை கணேஷ்.கே.பாபு இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

கவின் மற்றும் அபர்ணா இருவரும் கல்லூரியில் படித்து வரும் காதலர்கள். திடிரேன ஒருநாள், அபர்ணா கர்பமாக இருப்பது தெரியவர. கவின் மற்றும் அபர்ணா இரு வீட்டாரும் இவர்களை தள்ளி வைக்கிறார்கள்.

குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் இவர்கள். தனியாக ஒரு வீடெடுத்து தங்கி வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஒரு நாள் காலை, இருவரும் சண்டையிட. கவின் வேளைக்கு சென்ற பின் பிரசவ வலியில் துடிக்கிறாள் அபர்ணா.

அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபர்ணா. பிரசவத்தின் பின், குழந்தையை விட்டு விட்டு தனது பெற்றோருடன் செல்கிறாள். அதன் பின், குழந்தையை தனி ஆளாக வளர்க்கிறார் கவின்.

சில ஆண்டுகள் கழித்து கவின் வேலைக்கு செல்லும் இடத்தில் அபர்ணாவும் பணியாற்ற, இருவரும் சந்திக்கிறார்கள். அதன் பின் இருவரும் சேர்ந்தார்களா? பிறந்த குழந்தையை ஏன் விட்டு சென்றார் அபர்ணா? என்பது மீதிக்கதை…

கல்லூரி மாணவனாகவும், அப்பாவாகவும் கவினின் நடிப்பு பாராட்டை பெறுகிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் அவரின் மௌனமும், உதட்டு அசைவும் நம்மை கண்கலங்கடிக்கிறது. “நட்புனா என்னனு தெரியுமா”, “லிப்ட்” இப்போது “DADA”. தேர்ந்தெடுக்கும் படங்களில் தனித்துவம் காட்டும் கலைஞனாக நிற்கிறார் கவின். இதே போல் கதை தேர்வு இருந்தால் இவருக்கு பிளாப் ரேஷியோ என்ற ஒன்றே இருக்காது.

அபர்ணா தாஸ் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என்றாலும். இப்படத்தில் சிறப்பான நடிப்பையே கொடுத்துள்ளார் அபர்ணா.

கவினின் நண்பராக நடித்த, ஹரிஷ் குமார் இப்படத்திலும் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். முதலும் நீ முடிவும் நீ என்ற படத்தில் “சைனீஸ்” கதாபாத்திரத்தில் நம் அனைவரையும் கவர்ந்தவர் இவர்.

அருவி படத்தின் புகழ் பிரதீப் குமார் இப்படத்தில் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து. பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் என்ற பட்டத்தை தட்டிச்சென்றுவிட்டார்.

கணேஷ்.கே.பாபு இயக்கம் பாராட்டதக்கது. அவரின் கதையும் க்ளைமாக்ஸும் பிரம்மாதம். நீண்ட நாட்கள்…. இல்லை இல்லை… பல ஆண்டுகளுக்கு பின் கண் கலங்கும் அளவிற்கு ஒரு பீல் குட் படத்தை நமக்கு விருந்தாக கொடுத்துள்ளார் இந்த படைப்பாளி.

ஜென் மார்டினின் இசை பல இடங்களில் நன்றாக இருக்கிறது. ஆனால், கைதட்டலை பெற்றது என்னவோ க்ளைமாக்சில் இருக்கும் மௌனராகம் தான்.

நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது என்பது சினிமா சேட்டையின் சஜெஷசன்.

DADA – தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.