விஜய்யின் வாரிசு படம் கடந்த ஜனவரி 11ம் தேதி திரைக்கு வந்தது. வம்சி இயக்கத்தில் உருவான இந்த படம் தற்போது 300 கோடி வசூலை கடந்து இருப்பதாக சில நாட்களுக்கு முன் படக்குழு தெரிவித்தது.
வாரிசுடன் போட்டிக்கு ரிலீஸ் ஆன துணிவு படத்தை விட வாரிசு பட மொத்த வசூல் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
துணிவு படத்தில் அஜித் சில காட்சிகளில் டூப் பயன்படுத்தியதாக முன்பே விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது வாரிசு விஜய்க்கும் ஒருவர் சண்டை காட்சிகளில் டூப் ஆக நடித்து இருக்கிறாராம்.
அந்த நபரின் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
