‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு; கோடை 2026 வெளியீட்டுக்குத் தயாராகும் காதல் கதை

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ரொமான்டிக் எண்டர்டெய்னர் லவ் ஓ லவ் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. சென்னை நகரை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட இந்தப் படம், நகர்ப்புறத்தின் அழகையும் நவீன காதல் உணர்வுகளையும் இணைத்து காட்சிப்படுத்துகிறது. மேலும் சில முக்கியக் காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன.

பவிஷ் நாராயணன் மற்றும் தெலுங்கு யூடியூப் பிரபலமான நாக துர்கா கதாநாயகன்-கதாநாயகியாக இணையும் இப்படத்தில், செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான First Look-ஐ விஜய் சேதுபதி வெளியிட்டது படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zinema Media and Entertainment Ltd தயாரிப்பில், தினேஷ் ராஜ் மற்றும் G. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு FOXn (பிரதீப் PJ & Wayne Pavey) இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பி.ஜி. முத்தையா மேற்கொண்டுள்ள நிலையில், எடிட்டிங்கை தேசிய விருது பெற்ற என்.பி. ஸ்ரீகாந்த் கவனித்துள்ளார்.