தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள LIK (Love Insurance Kompany) திரைப்படம், வரும் அக்டோபர் 17-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.
இந்தப் படத்தில் பிரதீப்புடன், கிருத்தி ஷெட்டி, எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார்.
படத்திற்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத், எடிட்டிங் பிரதீப் ஈ. ராகவ், கலை இயக்கம் டி.முத்துராஜ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான முதல் பாடல் “தீமா தீமா” ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் டீசர் ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட உள்ளது.
படக்குழுவினர் தெரிவித்த தகவலின் படி, பாடல்கள், டிரெய்லர், ஸ்னீக் பீக் போன்றவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன.