கோமாளி, லவ் டுடே ஆகிய படங்களின் இயக்குனர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் அடுத்து நடித்த படங்கள் தான் லவ் டுடே மற்றும் டிராகன். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் அவருக்கு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் டியூட்(DUDE) திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழுவதுமாக காமெடி கலந்து உருவாகி வரும் இத் திரைப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கின்றனர்.
ஒருவேளை சிவகார்த்திகேயன் அப்படி நடித்தால், பிரதீப் ரங்கநாதன் இன்னும் அடுத்த உயரத்திற்கு எட்டுவார் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.