இயக்குநர் எச் வினோத் இயக்கிய ‘ஜன நாயகன’ திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும் தனது கடைசி படம் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்த பேசிய மலையாள நடிகை மமிதா பைஜுவின் சமீபத்திய வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அயர்லாந்தில் நடந்த கேரள கார்னிவலில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக மமிதா பைஜு கலந்து கொண்டார். மலையாளத்தில் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர், தளபதி விஜய்யுடன் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்டார் .
அதற்கு பதிலளித்த மமிதா பைஜு, “ஒரு நாள், நாங்கள் ஒன்றாக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, ’ஜன நாயகன்’ தான் அவருடைய கடைசி படமா என்று நான் அவரிடம் கேட்டேன். திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பது குறித்து, தேர்தல் முடிவுகளை பொறுத்து முடிவு செய்வேன் என்று விஜய் சார் வெளிப்படையாகச் சொன்னார்” என்றார்.