அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1800 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சியில் பிரீமியர் ஆனது. நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த மாஸிவ் கதாபாத்திரத்தை இந்தி பேசும் ரசிகர்களும் கொண்டாடினர். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘புஷ்பா2’ திரைப்படம், 5.1 TVR ரேட்டிங் மற்றும் 5.4 கோடி பார்வைகளைப் பெற்று, இந்த வருடத்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
https://x.com/DoneChannel1/status/1936328493941637623?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1936328493941637623%7Ctwgr%5E609314bbe202cef59417dba6fb8eacbdee6742cc%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2F
‘ஸ்ட்ரீ 2’, ‘பதான்’, ‘அனிமல்’ மற்றும் பல பிளாக் பஸ்டர் படங்களின் ரெக்கார்டையும் இது உடைத்துள்ளது. இந்த நம்பரையும் தாண்டி, படத்தின் எமோஷனல் தருணங்கள் தான் ஆடியன்ஸை கனெக்ட் செய்திருக்கிறது. பாலிவுட் ஜெயண்ட்ஸை தாண்டி புஷ்ப ராஜாக அல்லு அர்ஜூனை பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் கொண்டாடி வருகின்றனர். இந்த சாதனை நடிகர் அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்தில் மற்றொரு மைல்கல். தேசிய விருது பெற்றதில் இருந்து பான் இந்தியா ஸ்டாராக உருவானது என தன்னுடைய ஒவ்வொரு வெற்றியிலும் அடுத்தடுத்து உயரத்தை அடைந்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.
புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் தனது 22 ஆவது படத்தில் நடிக்கிறார் அல்லு அர்ஜுன். அமெரிக்காவில் டெஸ்ட் சூட் நடைபெற்ற நிலையில், படம் சயின்ஸ் பிக்ஸனாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இன்னும் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகாத நிலையில் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. அல்லு அர்ஜுன் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும் டைம் டிராவல் பற்றிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.