ஆனந்தராஜ், வைபவ், அதுல்யா ரவி, சுனில், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், ஜான்விஜய் இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து, டி இமான் இசையில், இரட்டை இயக்குனர்களான விக்ரம் ராஜேஸ்வர் அருண் கேசவ் ஆகியோரது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
சிறுவயதில் லிவிங்ஸ்டனை போலீசாரிடம் இருந்து வைபவ் மற்றும் அவரது நண்பர் மணி கண்டன் காப்பாற்றிய ஒரே காரணத்திற்காக வளர்ந்த பின்பும் வைபவையும் மற்றும் அவரது நண்பரும் செய்யும் பல தவறுகளை லிவிங்ஸ்டன் காப்பாற்றி விடுகிறார். இந்நிலையில் அவருடைய பாஸ் ஆன ஷிஹான் ஹுசைனியிடம் இருந்து லிவிங்ஸ்டனுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது . அந்த அசைன்மெண்டுக்காக வைபவ் மற்றும் அவரது நண்பரை அனுப்புகிறார் லிவிங்ஸ்டன். வைபவும் அந்த டாஸ்கை முடித்து வெளியே வரும்போது, டாஸ்மாக்கில் நடந்த சண்டையில் கொண்டு வந்த பணத்தை தவற விட்டு விடுகிறார்கள். இதனால் மரண பயத்தில் இருக்கும் வைபவும் மற்றும் அவரது நண்பருக்கும் ரெடின் கிங்ஸ்லி உதவி செய்கிறார். அவர் சென்னையின் பழைய திருடர்களான ஆனந்தராஜ், சுனில், ஜான்விஜய், மொட்ட ராஜேந்திரன் ஆகியோரிடம் அறிமுகப்படுத்துகிறார். அவர்களின் மூலம் ஒரு நகை கடையை கொள்ளையடிக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் அந்த திட்டம் தோல்வி அடைந்த காரணத்தினால், ஒரு பேங்க்கையே கொள்ளையடிக்கலாம் என்று அடுத்த முடிவு எடுக்கிறார்கள். இறுதியில் அவர்கள் நினைத்தது போல் பேங்கில் இருந்து பணத்தை கொள்ளை அடித்தார்களா? அதேபோல் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தார்களா என்பது தான் படத்தின் கதை.
தமிழ் சினிமாவிற்கு இந்த கதை கொஞ்சம் பழையது தான் என்றாலும் திரைக்கதையில் வித்தியாசமாக நிரப்பி இருக்கிறார்கள்.
வைபவின் நடிப்பும் சரி அதுல்யா ரவியின் துள்ளலான இளமையும் சரி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது.
ஆனந்தராஜ் மற்றும் மொட்ட ராஜேந்திரனின் காமெடி நம்மை வயிறு குலுங்கி சிரிக்க வைக்கிறது.
டி இமானின் இசை நமது சிரிப்பு நெடியை ஏற்றுகிறது.
இளம் இயக்குனர்கள் பழைய கதையை புதுவித பாணியில் கொடுத்திருப்பது, அவர்களுடைய அசாத்திய திறமைக்கு ஒரு மிகப்பெரிய உதாரணம்.
ஆக மொத்தத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் காமெடியான ஜனரஞ்சகமான படம்.