கமல் – மணிரத்னம் கூட்டணியில் நேற்று வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் டிரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது.
நாயகன் பாணியில் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நாயகன் 2 படத்துக்கு பதிலாக சிந்து சமவெளி 2 படத்தை மணிரத்னம் ஏமாற்றி இயக்கிவிட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் விவேகம் படத்தை மாற்றி எடுத்து இயக்குனர் சிவாவுக்கு மணிரத்னம் டிரிபூட் செய்துவிட்டார் எனவும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.