Madras Matniee – திரை விமர்சனம்

காளி வெங்கட், சத்யராஜ், ஷெல்லிநபக்குமார், ரோஷினி ஹரிப்பிரியன், ஜார்ஜ் மரியம் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

அறிவியல் புனைகதை ஆசிரியராக வரும் சத்யராஜ் அவர் எழுதும் அனைத்து கதைகளும் மிகவும் போர் அடிக்கிறது என்று காரணத்தினால் ஒரு நடுத்தர மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதுமாறு அவர் ஹோமில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். அதனால் அவர் ஒரு நடுத்தர மனிதனின் வாழ்க்கையை தேடி ஓடுகிறார் இப்படியாக கதை விரிவடைகிறது.

சாதாரண ஆட்டோ ஓட்டுநரான காளி வெங்கட், குடும்பத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கும் ஷெல்லி, வேலைக்காக முயற்சி செய்யும் தம்பி, பெங்களூருவில் ஐடி கம்பெனியில் குடும்பத்து பாரத்தை சுமக்கும் அக்கா என கதை விரிவடைகிறது. இவர்களுக்குள் இருக்கும் உறவு கலாச்சாரம் பற்றி தான் இந்த கதை பேசுகிறது.

குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி வரிசையில் இந்த ஒரு கதையையும் சேர்க்கலாம்.

ஒரு சாதாரண வாழ்வியல் கதையை மிகவும் பேண்டஸியாக எடுக்க முயற்சித்து இருக்கிறார்கள் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் காளி வெங்கட் சமீப காலங்களாக ஒரு நல்ல பரிமாணத்தை ஏற்படுத்தி வருகிறார் இந்த படத்தில் குறிப்பாக ஒரு காட்சியில் அவரின் ஆக்சன் அவதாரத்திற்கு விதை போட்டது போல் உள்ளது. ஷெல்லி மலையாள நடிகை இந்த படத்தில் ஒரு யதார்த்தமான ஒரு குடும்ப அம்மாவாக வந்து அனைவரையும் மிரட்டி உள்ளார். ரோஷினி ஹரிப்ரியனின் குற்ற உணர்ச்சி சார்ந்த நடிப்பு மிகவும் யதார்த்தம்.

படத்திற்கு இசை ஒரு பக்கபலமாக இருந்தாலும், சத்யராஜ் பேசுவதை கொஞ்சம் குறைத்து இருந்திருக்கலாம். அதேபோல் டார்க்ஹியூமர் என்ற பெயரில் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் சில இடங்களில் கதை நகருவதை கொஞ்சம் தவிர்த்து இருந்திருக்கலாம்.

இவையெல்லாம் தவிர்த்து மெட்ராஸ் மேட்னி படத்தை பார்த்தால் இது ஒரு நல்ல குடும்பப்பாங்கான படம்.