ஐந்து நண்பர்கள் ஒரு நாள் இரவு மது அருந்திவிட்டு ஹேங் ஓவரில் படுத்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது திடீரென்று அவர்களது நண்பர்களில் ஒருவன் இறந்து கிடக்கிறான். அந்தப் பிணத்தை யாரும் பார்ப்பதற்கு முன் அதை டிஸ்போஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கிடையில் அவனை யார் கொலை செய்தது என்று இவர்களுக்கு உள்ளேயே ஒரு போட்டி நடக்கிறது. இறுதியில் அந்த பிணத்தை என்ன செய்தார்கள் இவர்களுக்கு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.
ஒருநாள் இரவில் நடக்கும் கதை வித்தியாசமான முயற்சி என்று பல விஷயங்களில் இதை புகழ்ந்து தள்ளலாம்.
ஆனால் திரைக்கதையை பொருத்தவரை படம் ஒரே இடத்திலேயே நகர்வது மிகவும் சலிப்பைத் தட்டுகிறது. பல சமயங்களில் நமது பொறுமையையே சோதிக்கிறது.
படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒளிப்பதிவாளர் அளவுக்கு அதிகமாக குளோசப் சாட்டுகளை வைத்துள்ளார். அது இன்னும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
மனிதர்கள் என்று பெயர் வைத்துவிட்டு இந்த படத்தில் ஒவ்வொரு மனிதனின் குணாதிசயங்களை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் அதை திரைக்கதையில் சொல்ல வந்த விதத்தில் நிறையவே கோட்டை விட்டிருக்கிறார்.
ஆக மொத்தத்தில் மனிதர்கள் படம் அனைத்து மனிதர்களுக்கும் பிடிக்குமான படம் இல்லை என்பது தான் உண்மை.