Karate kid – The Legends திரை விமர்சனம்

ஜாக்கி சான், டேனியல் லா ரூசோ, ரால்ப் மாச்சியோ நடித்து இயக்குனர் ஜானதன் எட்விஸ்டில் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.

1984ம் ஆண்டு வெளியான தி கராத்தே கிட், 1986ம் ஆண்டு வெளியான தி கராத்தே கிட் 2ம் பாகம் மற்றும் 1989ல் வெளியான அதன் 3ம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ரால்ஃப் மாச்சியோவுடன் இணைந்து இந்த படத்தில் ஜாக்கி சான் நடித்துள்ளார். இரண்டு கிளைகள் ஒரு மரம் என்கிற கான்செப்ட்டில் மிஸ்டர் ஹான் கதாபாத்திரத்தில் நடித்த ஜாக்கி சான் மற்றும் டேனியல் லா ரூசோ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரால்ஃப் மாச்சியோ இருவரும் இணைந்து அறிமுக நடிகரும் இந்த கராத்தே தி லெஜண்ட்ஸ் படத்தின் ஹீரோவுமான லீ (பென் வாங்)க்கு எப்படி சண்டை போட கற்றுக் கொடுத்து சண்டைப் போட்டியில் வெற்றிப் பெற வைக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.

திரைக்கதை கராத்தே கிட் படத்துக்கே உரிய ஒரு டெம்ப்ளேட் தான். வழக்கம்போல் ஒரு சிறுவன் அவனின் காதல் அவன் அம்மா பாசம், கராத்தே போட்டி என்றே நகருகிறது.

சிறு வயதில் இருந்தே ஜாக்கி சான் படங்கள் என்றாலே உலகளவில் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அவரது ஸ்டன்ட் காட்சிகளில் நகைச்சுவை கலந்து ரசிகர்களை ரொம்பவே என்டர்டெயின் செய்தது தான் அவரது வெற்றியின் ரகசியம்.ஜாக்கிசானின் லூட்டி நம்மை ரசிக்க வைத்தாலும் ஆக்சன் காட்சிகள் பெரிதாக இல்லாமல் போனது கொஞ்சம் வருத்தம் தான். மேலும் வயதான தோற்றத்தில் ஜாக்கிசானை பார்ப்பதற்கு இன்னும் வருத்தம் அதிகமாகவே இருக்கிறது.

லெஜெண்ட்ஸ் இருவரது சண்டை காட்சிகளும் படத்தில் இல்லை. ஆனால் அதற்குப் பதிலாக இளம் கதாநாயகனான லீ சண்டைக் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. நியூயார்க் நகரம் என்பதற்காக வெறும் சுற்றுப்புறத்தை காட்டாமல் Top Angle ல் நிறைய பெரிய பெரிய கட்டிடங்களை காட்டி இருக்கிறார்கள். அது மிகவும் வித்தியாசமான ஒளி பதிவாக நம்மை ரசிக்க வைக்கிறது.

படத்தின் குறையாக பார்க்கப்படுவது, முந்தைய படங்களில் எமோஷனல் வேல்யூஸ்க்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதேபோல் நச் வசனங்களும் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அப்படி எதுவுமே இல்லை.

ஆனாலும் கராத்தே கிட் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு காமெடி ஆக்சன் படம்.