நிழல்கள் ரவி, சந்தானம், கஸ்தூரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், மாறன் மொட்டை ராஜேந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
ராப் ரிவியூவராக வரும் சந்தானம் அனைத்து படங்களையும் கலாய்த்து தள்ள கூடியவர். Review வர்களால் தான் சினிமா அழிகிறது என்று நினைத்த செல்வராகவன் பேயாகியும் ரிவ்யூவர்ஸை கொள்ளத் துடிக்கும் நபர். அதனால் செல்வராகவன் சந்தானத்தை தனது தியேட்டருக்கு வந்து படம் பார்க்குமாறு அழைத்து ஓடும் படத்தில், அவரையும் அவரது குடும்பத்தையும் திரையரங்கிற்குள் தள்ளி விட்டு விடுகிறார். அந்தப் படம் முடியும் வரை அவர்கள் உயிரோடு இருந்தால் வெளியே வரலாம் இல்லை என்றால் படத்தில் உள்ளது போல் இறந்து சாகலாம் என்று ஒரு கண்டிஷன் போடுகிறார். இந்த கண்டிஷன்ல இருந்து சந்தானம் எப்படி தப்பித்தார். அவருடைய குடும்பத்தாரையும் எப்படி தப்பிக்க வைத்தார்? தப்பிப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எல்லாம் செய்தார்கள் என்பதை கலகலப்புடனும் நகைச்சுவடனும் சொல்லி இருக்கும் படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல்.
சந்தானத்தின் நடிப்பு வழக்கமான நடிப்பை விட வேற ஒரு பரிமாணத்தில் இருந்தது ஆனால் இந்த நடிப்பை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே. யாஷிகா ஆனந்த் கஸ்தூரி இருவரும் கவர்ச்சியின் உச்சகட்டம். வழக்கம்போல் மாறன் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் காமெடியில் கலக்கி எடுத்திருக்கிறார்கள். வழக்கம்போல் ரெடின் கிங்ஸ்லீ கத்திக்கொண்டே இருக்கிறார்.
இயக்குனர் திரைக்கதைக்காக மெனக்கெட்டதாக தெரியவில்லை ஆங்கிலத்தில் ஸ்பூவ் மூவி என்று சொல்வார்கள். அதாவது மிகவும் பயங்கரமான படத்தை கிண்டல் பண்ணி கலாய்த்து எடுப்பார்கள். அதுபோல் ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட பழங்களான ட்ரையாங்கிள், ராங் டர்ன் ஆகிய படங்களை மைய கதையாக எடுத்து அதில் ஒரு திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார். அதை ஓரளவு நகைச்சுவையாகவும் கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.
படத்திற்கு கூடுதல் பலமாக இசையும் ஒளிப்பதிவும் VFX காட்சிகளும் படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன.
படத்தில் வசனத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.
இயக்குனர் பிரேம் ஆனந்த் இந்த கதையை தொழில்நுட்ப ரீதியாக நன்றாக எடுத்து இருந்தாலும் லாஜிக் மீறலாகவே எடுத்துள்ளதால் சில நேரம் நமக்கு சில பல சலிப்புகளை தட்டுகிறது. அதை தவிர்ப்பதற்கு திரைகதையை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்.
ஆக மொத்தத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் முழுக்க முழுக்க இன்றைய இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம்.