ஜூலையில் வெளியாகிறது கவின் kiss படம்!

சின்னத்திரை நடிகராக இருந்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கவின்.

அதைத்தொடர்ந்து ‘லிப்ட்’ , ‘டாடா’ ஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். கடைசியாக அவர் நடித்திருந்த ‘பிளடி பெக்கர்’ திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கவின் ‘கிஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிரபல நடன இயக்குனரான சதீஷ் இயக்கும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படத்தின் நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியானது.

இந்நிலையில் இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://x.com/Kavin_m_0431/status/1922655259635188118?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1922655259635188118%7Ctwgr%5E67faad0f288b8d87ff1627833292902bdee8fb78%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2F