மதுசூதன், லிங்கேஷ், திவ்யா தாமஸ், லியா இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
கதைப்படி மதுசூதன் 56 மீனவ கிராமங்களுக்கு தலைவனாக இருக்கிறார். அவருடைய ஒரே மகள் ரொம்ப செல்லமாக வளர்கிறார். மேலும் அவருடைய தங்கச்சி பையனையும் அவர்தான் வளர்க்கிறார். காரணம் என்னவென்றால் அவருடைய தங்கச்சி மற்றும் வீட்டுக்காரரை சுனாமியில் அடித்து சென்றதனால் இவர்தான் அவரையும் சேர்த்து வளர்க்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தான் திருமணம் என்று ஊரே கூடி நின்று பேசுகையில், தமிழ்நாட்டு கலாச்சாரம் கற்றுக் கொள்கிறேன் என்று வெளிநாட்டுப் பெண் ஒருவர் அங்கு வருகிறார். அந்த நேரத்தில் அந்தப் பெண்ணிற்கும் மாமனான லிங்கேஸ்க்கும் காதல் ஏற்படுகிறது. இது குடும்பத்தில் விரிசலையும் அந்த மீனவர் குடும்பத்தில் பெரிய பிரச்சனைகளையும் உருவாக்குகிறது. இறுதியில் இந்த பிரச்சனைகளை கலைத்தார்களா? நினைத்தபடி லிங்கேஷ் அந்த வெள்ளைக்கார பெண்ணுடன் ஜோடி சேர்ந்தாரா என்பதுதான் படத்தின் கதை.
லிங்கேஷ், திவ்யா தாமஸ், லியா மூன்று பேரும் நடிப்பில் ஒரு நல்ல பரிமாணத்தை கொடுத்துள்ளனர்.
கதை ஏற்கனவே பழக்கப்பட்ட கதை தான் என்றாலும் திரைக்கதையும் ஏற்கனவே பழக்கப்பட்ட திரைக்கதை தான். ஆனாலும் காட்சிகள் போரடிக்காமல் செல்கிறது. ஆனால் என்ன.. பெரிய ஆர்டிஸ்ட் வேல்யூ இல்லாததால் யாருக்கும் இந்த படத்தின் வேல்யூ தெரியாது என்றுதான் தோன்றும்.
படத்தின் இசையும், ஒளிப்பதிவும் இரண்டுமே மிக அருமையாகவே உள்ளன.
பெண் இயக்குனரான ஜெயலட்சுமி மீனவ கிராமங்களில் நடக்கும் ஒரு காதல் கதையை உணர்வுபூர்வமாக எடுக்க முயற்சித்திருக்கிறார். அதில் சற்று தேறியிருக்கிறார். ஆனால் இது பத்தாது என்றே தோன்றுகிறது. திரைக்கதையிலும் சரி கதையிலும் சரி இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
ஆக மொத்தத்தில் என் காதலே ஏற்கனவே தெரிந்த காதலை புதிய பரிமாணத்தில் கொடுக்க முயற்சி செய்திருக்கும் படம்.