சிறுவனாக கந்தர்வா, மகாதார பகவத், ரேணு சதீஷ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் ஆர் எஸ் திவாகர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
சிறுவனாக இருக்கும் கந்தர்வாவுக்கு அடிக்கடி ஒரு உருவம் கண்ணில் தெரிகிறது. அந்த உருவம் தன்னை கினோ என்றும் தன்னுடன் வரவும் என்றும் ஒவ்வொரு தடவையும் அழைத்து பேசுகிறது. இதனால் மகனுக்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறதா பித்து பிடித்திருக்கிறதா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்று அவனுடைய தந்தையும் தாயும் பயம் கொள்கிறார்கள். இதற்காக சில பரிகாரங்களையும் செய்கிறார்கள். உளவியல் ரீதியாகவும் சில விஷயங்கள் செய்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் திரைக்கதை மிகவும் மெதுவாக ஆவணப்படம் போல் சென்றிருந்தாலும் இது அனைவரும் யோசிக்காத ஒரு கருவை கொண்டுள்ள படம்.
யாருமே யோசிக்காத ஒரு கதை கருவை எடுத்த இயக்குனருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
அதிலும் குறிப்பாக ஒரு சாதாரண பட்ஜெட்டில் இந்த கதையை இவ்வளவுதான் சொல்ல முடியும் என்ற விதத்தில் சொல்லிய விதம் அருமை.
இந்தப் படத்திற்கு தேவையான ஒளிப்பதிவு கொடுத்ததற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் காரணம் இந்த படத்தின் பட்ஜெட் மிக மிகக் குறைவு.
என்னதான் இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் இந்த படம் மிக மிக மெதுவாக நகருகிறது. இரண்டாம் பாதியில் அறிவியல் பள்ளிக்கூடத்தில் படித்த ஒரு பீலை கொடுக்கிறது. இவை எல்லாம் சற்று சினிமா தனமாக யோசித்து இருந்தால் இந்த படம் நன்றாக வரக்கூடிய படம் என்று சொல்லி இருக்கலாம்.
ஆனாலும் கீனோ மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை. ஆக மொத்தத்தில் கீனோ படம் ஒரு ஆவணப்பட கதைக்களம் கொண்ட ஒரு நல்ல படம்.