எமன் கட்டளை திரைவிமர்சனம்

அன்பு,டி பி கஜேந்திரன், சுந்தர்ராஜன், அனுமோகன், நளினி, சார்லி,சங்கிலி முருகன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

சினிமா கனவில் சுற்றும் நாயகன் அன்பு, சொந்த படம் தயாரிப்பதற்காக, தனது நண்பருடன் ஒரு திருமண மண்டபத்தில் நகைகளை கொள்ளையடிக்கிறார். அந்த திருமணம் நின்றுவிட

அவமானத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மணமகள் சந்திரிகா மற்றும் அவரது தந்தை டி.பி.கஜேந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள். இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக நினைக்கும் அன்பு, குற்ற உணர்ச்சியால் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறார். இறந்த பிறகு எமலோகம் சென்று எமனையும் சந்திக்கிறார். யாரும் இறக்கவில்லை என்று அன்புவுக்கு புரியவைக்கும் எமன், ’60 நாட்களில் சந்திரிகாவுக்கு திருமணத்தை நீ நடத்தி முடிக்க வேண்டும். இல்லையெனில் தலைவெடித்து இறப்பாய்’ என்று கூறி மீண்டும் உயிர் கொடுத்து பூமிக்கு அனுப்புகிறார்.எமன் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்று பூமிக்கு திரும்பும் அன்பு, சந்திரிகாவின் திருமணத்தை 60 நாட்களுக்குள் நடத்தி வைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதை நகைச்சுவையாக எடுக்க வேண்டும் என்று கவனத்தில் படத்தில் கொடுத்திருக்கிறார்கள் ஆனால் திரைக்கதையில் அந்த வேகத்தில் இல்லாததால் நடிப்பும் பெரிதாக ஈர்க்கப்படாததால் சற்று சொதப்பலாகவே உள்ளது.

படத்தின் இசையும் சரி ஒளிப்பதிவும் சரி மிகவும் சுமார் தான்.

இந்தப் படத்தை நீ இயக்குனர் எஸ் ராஜகுமார் இந்த படத்தின் ஓட்டைகளை கவனிக்காமல் படத்தை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் கோட்டை விட்டது தான் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

ஆக மொத்தத்தில் எமன் கட்டளை பெரிதாக எடுபடவில்லை.