தனது 52 வது திருமண நாளை ஒட்டி விஜய்யின் அம்மாவுக்கு BMW கார் வழங்கிய SAC!

தமிழ் சினிமாவில் 80, 90-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குநர்களில் ஒருவராக எஸ் ஏ சந்திரசேகர். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக மாறினார்.

தன்னுடைய மகன் விஜய்யை வைத்து பல படங்களை இயக்கி அவரை அறிமுகம் செய்தார்.

தன் மனைவி ஷோபாவுடன் சென்னையில் வசித்து வரும் எஸ் ஏ சி, தன் மகன் விஜய்யின் த.வெ.க கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா தம்பதியினர், 52-வது திருமணநாளை கொண்டாடியுள்ளனர்.

https://x.com/Dir_SAC/status/1915319005637980604?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1915319005637980604%7Ctwgr%5E7a9457382bc05669ea2a77fc8bc5d6a6ee19f9af%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2F

அதற்காக ஷோபாவுக்கு திருமணநாள் பரிசாக புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றினை வாங்கி கொடுத்துள்ளார். ஷோரூமில் கார் டெலிவரி எடுத்த வீடியோவை எஸ் ஏ சந்திரசேகர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காரின் விலை ரூ75 லட்சம் என கூறப்படுகிறது.
இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.