மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தொடரும் இந்த படத்தில் மோகன் நாயுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை ஷோபனா நடிக்கிறார்.
இருப்பினும், படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தி சமீபத்தில் தனியார் எஃப்.எம் உடனான ஒரு நேர்காணலில், ஷோபனாவை நடிக்க வைப்பதற்கு முன்பு, ஜோதிகாவிடம் படத்தின் கதையை கூறியதாகவும் அந்தப் படத்தில் ஜோதிகா நடிக்காமல் போனதால் தான் ஷோபனாவை இந்தப் படத்தில் நடிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து தருண் பேசுகையில், “தொடரும் படத்தில் நடிக்க முதலில் ஷோபனாவைத் தான் தேர்வு செய்தோம். இருந்தாலும், அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றார். இந்தப் பிரச்சனையால் தான் நாங்கள் ஷோபனாவை அணுகுவதற்கு முன்பு, ஜோதிகாவிடம் பேச தயாரானோம். அதனால் தான் ஜோதிகா மோகன்லாலுடன் சேர்ந்து நடித்தால் இந்த புதிய ஜோடி மக்களிடம் எப்படி ரியாக்ட் செய்யும் என்பதை பார்க்க காத்திருந்தோம்.
பின் ஜோதிகாவை சந்தித்து படம் குறித்து எல்லாவற்றையும் பேசி ஸ்கிரிப்டையும் விவரித்தோம். அப்போது ஜோதிகா கதையை கேட்டு மிகவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் நாங்கள் படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில், ஜோதிகா மற்றும் சூர்யா உலக சுற்றுப் பயணத்தை திட்டமிட்டிருந்தனர். அதனால் மீண்டும் இந்தப் படத்தில் ஷோபனாவே கதாநாயகியாக வந்தார்.
ஷோபனாவும், மோகன்லாலும் மலையாள சினிமாவில் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒருவர். நடிகர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் ‘அவிதாதேபோல் இவிடேயும்’, ‘தேன்மாவின் கொம்பத்து’, மின்னாரம், பவித்ரம், மாம்பழக் காலம் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
தொடரும் என்பது மோகன்லால் மற்றும் ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஒரு அதிரடி-நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும், இவர்களுடன் ஃபர்ஹான் பாசில், மணியன்பில்லா ராஜு, பினு பப்பு, இர்ஷாத் அலி மற்றும் ஆர்ஷா சாந்தினி பைஜு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை கே.ஆர்.சுனில் எழுத, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் மற்றும் ரெஜபுத்ரா ரிலீஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் ஏப்ரல் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.