வீர தீர சூரன் 2 திரைவிமர்சனம்

சீயான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சர மூடு, துஷாரா விஜயன் இன்னும் பல நட்சத்திரங்களில் நடிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில், SU அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.

பழைய பகையை மனதில் வைத்து எஸ்பி அழகிரி நாதனாக வரும் எஸ் ஜே சூர்யா, பெரியவர் மற்றும் அவருடைய மகனை என்கவுண்டரில் போட்டு தள்ள துடிக்கிறார். அதே நேரத்தில் சுராஜ் வேந்திர மோடியின் அப்பாவும் பெரியவர் என்று ஊராரால் அழைக்கப்படுபவருமான ஆகிய இருவரும் சேர்ந்து எஸ்.ஜே. சூர்யாவை போட்டுத் தள்ள துடிக்கிறார்கள. இதற்காக பெரியவரிடம் பழைய அடியாளாக இருந்து தற்போது சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் காளியாக வரும் விக்ரமின் உதவியை நாடுகிறார் பெரியவர். விக்ரமும் வேறு வழி இல்லாமல் தன் குடும்பம் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அந்த வேலைக்கு ஒப்புக்கொள்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் வீர தீர சூரன் பார்ட் 2 படத்தின் கதை.

விக்ரமின் நடிப்பு எப்படி உள்ளது என்று நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. துஷாரா விஜயன் விக்ரமுக்கு இணையாக டப் கொடுத்து நடித்து இருக்கிறார். வழக்கமாக அனைத்து படங்களிலும் கத்திக் கொண்டே இருக்கும் எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் ஒரு அமைதியான வில்லனாக வருகிறார் வில்லத்தனம் நடிகர் ரகுவரனை காட்டுகிறது. சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது.

படம் இரண்டாம் பாகம் என்ற காரணத்திற்காக கதை மாந்தர்களின் கதாபாத்திரம் என்ன என்று சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இயக்குனரோ கதை மாந்தர்களின் கதாபாத்திரம் என்ன என்று சொல்லி படத்தை ஆரம்பிப்பதால் படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக செல்கிறது. இரண்டாம் பாதியும் மெதுவாக சென்றாலும் கூட ப்ரீ கிளைமாக்ஸ் இல் வரும் சண்டைக் காட்சி ஆகட்டும் இறுதி காட்சியில் வரும் சண்டைக்காட்சி ஆகட்டும் ரசிகர்களை நாற்காலி முனையில் உட்கார வைத்து விடுகிறது.

மேலும் விக்ரம் மற்றும் துஷாரா விஜயனின் காதல் காட்சிகள் படத்திற்கு பெரிய வலுவை சேர்த்து இருக்கிறது.

ஒரே இரவில் நடக்கும் கதை என்ற ஒரே காரணத்திற்காக தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிகவும் எதார்த்ததையும் அளவுக்கு அதிகமான ரசிக்கும் தன்மையையும் கொடுத்திருக்கிறது.

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. பாடல் அனைத்தும் மிக அருமையாக உள்ளது.

இந்த படத்தில் வரும் வசனங்கள் மிகக் குறைவாக இருந்தாலும் அந்த வசனங்கள் அனைத்தும் மிகவும் பவர்ஃபுல்லாக உள்ளது படத்திற்கு கூடுதல் பலம்.

சித்தா போன்று மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் எஸ் யு அருண் குமாரின் அடுத்த படைப்பு இப்படி ஒரு வணிகரீதியான சினிமாவாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

ஆக மொத்தத்தில் வீர தீர சூரன் 2 படம் விக்ரம் ரசிகர்களுக்கான படம்.