அஸ்திரம் திரைவிமர்சனம்

ஷாம், வெண்பா இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.

குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற இடத்தில் தோள்பட்டையில் குண்டு பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் கொடைக்கானல் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஷாம். இந்த சூழலில் பூங்காவில் பூங்காவில் ஒருவர் தானாக முன்வந்து தன் வயிற்றை புதிது தற்கொலை செய்து கொள்கிறார். அவர் கொலை செய்த விதம் எதோ ஒரு வித்தியாசமான சூப்பர் நேச்சுரல் எலிமெண்டாக இருக்கும் இன்று நினைத்து, இந்த வழக்கை தானாகவே முன்னெடுக்கிறார் ஷாம். ஆனால் அந்த க்ரைமே துப்பு துலக்கும் போது தான் தெரிகிறது இது போல் இதற்கு முன்னாலும் சில பல கொலைகள் நடந்துள்ளன என்று. இதற்கெல்லாம் காரணம் என்ன அதை எதனால் நடைபெறுகிறது இதற்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று தேடி கண்டுபிடிப்பதை அஸ்திரம் படத்தில் கதை.

வித்தியாசமாக போரில் தோற்கும் தருவாயில் ஜப்பானியர்கள் தற்கொலை செய்துகொள்ளும் முறையான ரோனின் முறையினை மையக்கருவாக வைத்து ஒரு புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த கதையை பின்னியிருந்தாலும், திரைக்கதையில் எந்த ஒரு பின்னலும் இல்லாமல் மிகவும் அமைதியான நீரோடையாக செல்வதால் நமக்கு தூக்கம் தான் வருகிறது.

ஷாம் நடிப்பு அருமை, ஆனால் மற்றவர்களின் நடிப்பு ஓவர் ஆக்டிங்.

இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.

இந்த படத்தின் இயக்குனர் படத்தின் முடிவை எந்த தைரியத்தில் செய்தார் என்று தெரியவில்லை. அதீத நம்பிக்கையில் இரண்டாம் பாகம் நமது கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த படத்தின் இறுதி என்ன நடக்கப் போகிறது என்பதை சொல்லாமல் விட்டுவிட்டாரோ என்னவோ? அதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய குறையாக தெரிகிறது.

ஆக மொத்தத்தில் அஸ்திரம் படத்தை சாம் என்னும் நடிகனுக்காக ஒரு தடவை பார்க்கலாம்.