விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் புதிய அப்டேட்!

விஜய் நடிக்கும் கடைசி படமான ‘ ஜனநாயகன்’ படத்தை எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்யுடன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். ‘ இந்த படத்தில் அனிமல் மற்றும் கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்து அசத்திய, பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் பெயரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ படத்தில் பிரபல இயக்குநர்கள் நடிப்பதாகத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி இப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இது விஜய்யின் கடைசி படமென்பதால் அவருக்கு நெருக்கமான இயக்குநர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் விஜய்யுடன் நடிக்க உள்ளதாக மற்றுமொரு சிறப்பு தகவலும் வெளியாகியுள்ளது.