அஜித் என் வீட்டிற்கு பக்கத்தில் தான் வேலை பார்த்தார் : நடிகை கௌதமி!

நடிகை கௌதமி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சித் தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார். நம்ம ஊரு பூவாத்தாபடத்திற்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது பெற்றுள்ளார். குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ராஜா கைய வச்சா, ருத்ரா, தேவர் மகன், நம்மவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கௌதமி, “ஆரம்ப காலத்தில் அஜித் என்னுடைய வீட்டு பக்கத்தில் தான் வேலை பார்த்தார். அப்போ அவர்கிட்ட பேசி இருக்கிறேன். இன்னைக்கு அதே அஜித் சினிமாவிலயும், விளையாட்டுலேயும் ஜெயிக்கிறதை பார்க்கிறோம். அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. இன்னைக்கு அவர் குடும்பம், சினிமா, விளையாட்டு எல்லாவற்றையும் தனித்தனியாக பிரித்து எல்லாத்துலையும் சக்சஸா இருக்காரு. இது அவரை பாலோவ் பண்ற பல இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்” என்று பேசி உள்ளார்.