யாருடைய பின்புலமும் இல்லாமல், தனது திறமையான நடிப்பால் கோலிவுட்டில் நிலைத்து நின்ற ஒரு சில நடிகர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் தல அஜித்குமார்.
நடிகர் அஜித்குமாரின் புதிய படமான விடாமுயற்சி கடந்த 6-ம்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஏப்ரல் 10-ம்தேதி ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக உள்ளது.
அஜித்குமார் தான் ஒப்பந்தம் செய்த படங்களில் படப்பிடிப்புகளை எல்லாம் முடித்து விட்டு தற்போது கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட உள்ளதால் அக்டோபர் மாதம் வரை படங்களில் நடக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடிப்பு தவிர பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த சில வருடங்களாக நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருவது மட்டுமல்லாமல் பல போட்டிகளிலும் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துபாயில் நடந்த 24 எச் சீரிஸ் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ 992 பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து உலக அரங்கில் தன் அணியை மட்டுமல்ல இந்தியாவுக்கும் பெருமையை தேடித்தந்தார்.