தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி இன்று முன்னணி நடிகர் என்று தமிழ் சினிமாவை போற்றும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றார். கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்த சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து பராசக்தி மற்றும் மதராசி என இரண்டு திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார்.
அந்தத் திரைப்படங்கள் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பை விட இன்னும் அதிகமாக உழைப்பேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://x.com/Siva_Kartikeyan/status/1891779246781046932?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1891779246781046932%7Ctwgr%5E890cff9d40ad36e4ac6ee63e8cb4dccbd90cdf63%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F