ஜே எஸ் கே சதீஷ், பாலாஜி முருகதாஸ், ரட்சிதா, சாந்தினி, சாக்ஷி அகர்வால் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
புகழ்பெற்ற பிசியோதெரபிஸ்ட் ஆக இருக்கும் பாலாஜி முருகதாஸ், காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். அதை விசாரிக்கும் அதிகாரியாக வரும் ஜே எஸ் கே சதீஷ் இறுதியில் அவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? இதில் உள்ள குழப்பங்கள் என்னென்ன என்பதுதான் படத்தின் கதை கரு.
நமக்கு எல்லாம் மிகவும் தெரிந்த பொள்ளாச்சி சம்பவம், நாகர்கோவில் காசி சம்பவம் இதனை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளனர்.
படத்தில் நடிகர்கள் அனைவரின் நடிப்பும் மிகப் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக ஜே எஸ் கே சதீஷ் நடிகர் என்ற இயல்பு இல்லாமல் எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவும் பாடல்களும் மிக அருமை.
பாடல்கள் துள்ளலோ துள்ளல்.
திரைக்கதையில் சிறிதளவு தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. அதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஜே எஸ் கே சதீஷ் இந்த கதையை எடுத்ததற்கு வாழ்த்துக்கள். பொதுவாக இது மாதிரியான கதைகளை கையாளுவது மிகவும் கடினம். அதற்கு இதற்கு முன்னால் தமிழில் வெளிவந்த படங்கள் ஆன நான் அவனில்லை திருட்டுப் பயலே படங்களே சாட்சி. அந்தப் பக்குவத்தை இந்த ஃபயர் படத்தில் ஜே எஸ் கே சதீஷ் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.
ஆக மொத்தத்தில் பெண்களை சுதந்திரமாக விடுங்கள் அதே சமயம் பாதுகாப்பாகவும் இருக்க அறிவுறுத்துங்கள் என்ற ஒற்றைக் கருத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த பெயர் படம் பெண்களுக்கான படம்.