விவேக் பிரசன்னா,சாக்ஷி அகர்வால் டேனியல் அன்னி போப், அர்ஜுனன், ஷியாம் சித்தா இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
ஷியாம் சித்தாவின் பிறந்த நாளுக்காக, நான்கு நண்பர்கள் ஒன்று கூடுகிறார்கள். அப்பொழுது ஒரு போட்டி நடக்கிறது. அந்தப் போட்டி என்னவென்றால், ஒவ்வொருவருக்கும் வரும் செல்போன் அழைப்பு மற்றும் குறுந்தகவல்களை அனைவரும் முன்னிலும் வாசிக்க வேண்டும் போனை எடுத்துப் பேச வேண்டும் என்பதுதான். இந்த விளையாட்டினால், ஒவ்வொருவரின் ரகசியமும் வெளிப்படுகிறது, இதனால் மற்றவர்கள் அவர்களை பற்றிய நினைப்பு என்னவாக இருக்கும் என்பதை பற்றி பேசுவது தான் இந்த படத்தின் கதைக்கரு.
ஒரு அருமையான கரு, ஆனால் ஒரே இடத்தில் திரைக்கதை நகர்வதால், படம் ரொம்பவே போர் அடிக்கிறது. இன்றைய காலகட்டங்களில் இருக்கும் உறவு மற்றும் கலாச்சார சிக்கலை எடுத்துப் பேசும் நோக்கில் படம் எடுக்கப்பட்டாலும், அது சொல்ல வந்த விஷயத்தை முழுதாக சொல்லாததால் சற்று அயர்ச்சி ஏற்படுகிறது.
மிகப்பெரிய பிறந்தநாள் விருதில், எட்டு பேர் வரை அமரும் பந்தியில் ஒரே ஒரு தந்தூரி சிக்கன் மட்டுமே வைத்து படத்தை எடுத்திருப்பது நிதி நெருக்கடி என்று கூறுவதா? அல்லது ஒளிப்பதிவாளரின் தனித்திறமை என்று கூறுவதா? என்றே தெரியவில்லை.
இந்த படத்தில் முக்கியமாக ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பும் மிக எளிதாகவும் நேர்த்தியாகவும் தனித்துவமாகவும் இருந்தது என்பது ஒரு முக்கிய பிளஸ்.
பின்னணி இசை படத்திற்கு ஓரளவு பலம் கூட்டியும் இருக்கிறது.
ஆக மொத்தத்தில் ரிங் ரிங் படம் ஒரு வித்தியாசமான கதை களத்தில் நகரும் படமாக இருப்பதால், வித்தியாசமான கதைகளை விரும்புபவர்கள் ஒரு தடவை பார்க்கலாம்.