உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்தவர் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 16 வயதான இளம் பெண்.
இவரது தோற்றம் காண்போரை கவர்ந்தது. யூடியூப்பில் இவரது வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மோனாலிசா போஸ்லே என அழைக்கப்படும் இந்த சிறுமி, பொதுமக்களின் தொந்தரவு மற்றும் செல்ஃபி வெறியால் கும்பமேளாவில் இருந்து கிளம்பி தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். சமூக வலைதளங்களில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது.
இந்நிலையில் தான் இயக்கப்போகும் ‘டைரி ஆஃப் மணிப்பூர்’ படத்தில் மோனாலிசாவை நடிக்க வைக்கப்போவதாக இயக்குநர் சனோஜ் மிஸ்ரா அறிவித்திருந்தார். அதன்படி அவர் மோனாலிசாவின் வீட்டுக்குச் சென்று அவரை சினிமாவில் நடிக்க வைக்க பெற்றோர்களிடம் ஒப்புதல் வாங்கியுள்ளார். இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவ் நடிக்கிறார். இதில் நாயகியாக மோனாலிசா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
