மதுரையில் நடந்த வருமான வரித்துறையினர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, பான் கார்டுகான இணையத்தளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். இதை செய்வதால் ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகள் தெரியாத மக்கள் எளிதில் அணுக முடியும் எனவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜய் சேதுபதி பேசியதாவது, “நான் படிப்பை முடித்துவிட்டு ஒரு சார்ட்டெட் அக்கவுண்டன்டாக பணியாற்றியுள்ளேன். அரசு தொடர்பான தகவல்களைப் புரிந்துகொள்வது சவாலான விஷயம். வருமான வரித்துறை, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய கார்ட்டூன்கள் மூலம் பான் கார்டு விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கியுள்ளது பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டில் மக்கள் ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும்போது, புதுப்பிப்புகளைத் தேடி அலைகிறார்கள். எனவே தகவல்கள் அவர்களுக்கு புரியும் மொழியில் இருந்தால் இது நடக்காது.
பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது குறித்த தகவல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. அதனை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழிலும் வெளியிட்டால் எல்லோரும் பயனடைவார்கள். ஏனென்றால் வருமானவரித்துறையின் அனைத்து அனைத்து தகவல்களும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன இன்று விஜய் சேதுபதி கூறினார்.