மணிகண்டன், குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், புதுமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொள்ளும் மணிகண்டன் ஷான்வி ஆகியோருக்கு மணமகள் வீட்டில் ஆதரவு இல்லாததால் மணிகண்டன் வீட்டிலேயே தங்கி ஷான்வி ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வருகிறார், மணிகண்டனின் அப்பாவான சுந்தர்ராஜனுக்கு தனது வீட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற ஆசை, மணிகண்டனின் அம்மாவுக்கு ஆன்மீகச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசை. பிளக்ஸ் டிசைன் கம்பெனியில் வேலை பார்க்கும் மணிகண்டன் இவர்கள் அனைவரின் ஆசையையும் நிறைவேற்ற போராடும்போது வேலை போய் விடுகிறது. மேலும் கடனாகி விடுகிறது. இதிலிருந்து எப்படி மீண்டுவந்தார் என்பதை சோகம் கலந்த நகைச்சுவையோடு சொல்லி இருக்கும் படம் தான் குடும்பஸ்தன்.
மணிகண்டனின் மாமாவாக வரும் குரு சோமசுந்தரம் நடிப்பில் அசத்தல். ஷான்வியும் தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்பு அழகாகவே உள்ளது.
சான் ரோல்டனின் இசை மிகவும் அழகாக உள்ளது.
கதை மிக எதார்த்தமாக இருந்தாலும், திரைக்கதையில் இயக்குனர் நிறையவே கோட்டை விட்டு இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
கொஞ்சம் கூட லாஜிக் பார்க்காமல் திடீரென்று கடன் வாங்குவதும் திடீரென்று கடை ஆரம்பிப்பதும் ஒரே இரவில் எல்லாம் மாறி விடுவது போல் ஒரு தோற்றத்தை காண்பித்து, திடீரென்று அதெல்லாம் இல்லை என்று சொல்லி முடிப்பது கொஞ்சம் வேடிக்கையாக உள்ளது.
ஒரு பக்கம் கதை மிகவும் சீரியசாக செல்லும் அதே நேரத்தில், மணிகண்டன் உறவுக்காரர்கள் இன்னொரு பக்கம் காமெடி என்ற பெயரில் சில விஷயங்கள் செய்கிறார்கள், அது பல இடங்களில் சலிப்பைத் தருகிறது. இதை புதுமுகம் இயக்குனர் ராஜேஸ்வர் காளி சாமி கவனத்தில் கொண்டிருக்கலாம்.
ஆனாலும் குடும்பஸ்தன் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படம்