பாட்டில் ராதா படத்தைப் பார்த்து கதறி அழுத மணிகண்டன்!

இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பாட்டல் ராதா.

மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதேநாளில் நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படமும் திரைக்கு வருவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், குடும்பஸ்தன் டிரைலர் நிகழ்வில் பேசிய மணிகண்டன், “ஒரு படத்தைப் பார்த்து அழுவது அபூர்வமாகவே நடக்கும். பாட்டல் ராதாவைக் கண்டு அழுதேன். குரு சோமசுந்தரம் மிகச்சிறந்த நடிகர். அவர் பாட்டல் ராதாவில் ஒரு இடத்தில் சிரிப்பார். அழக்கூடாது என மிகக் கஷ்டப்பட்டும் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.” என்றார்.