ரசிகர்கள் கொண்டாடும் விடாமுயற்சி ட்ரைலர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார் இவரது நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.

இந்த படம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்த படத்தின் டிரைலர் கடந்த 16ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது விடாமுயற்சி ட்ரெய்லர் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனை அஜித்குமார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.