மத கஜ ராஜா திரைவிமர்சனம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்திருக்கும் படம்.

விஷால், வரலட்சுமி, அஞ்சலி, மனோபாலா, சந்தானம் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம்.

நான்கு பள்ளிக்கூட நண்பர்கள், பெரியவர்களானதும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை உருவாகிறது. இந்த நான்கு பேரும் அவரது பள்ளி வாத்தியார் திருமணத்திற்கு ஒன்று சேர்கிறார்கள். அங்கு இந்த நான்கு பேருடைய பிரச்சினையையும் விஷால் எப்படி தீர்த்தார் என்பதுதான் படத்தின் கதை.

சுந்தர் சி படம் என்றாலே லாஜிக் பார்க்கக் கூடாது, படத்தில் மேஜிக் தான் பார்க்க வேண்டும். அந்த மேஜிக் இந்த படத்தில் செம்மையாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

முதல் பாதியில் வரலட்சுமியின் கவர்ச்சி ரசிகர்களை சுண்டி இழுத்தால், இரண்டாம் பாதியில் வரும் மனோபாலாவின் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. படம் முழுவதும் சந்தானத்தின் காமெடி கலக்கலோ கலக்கல். இந்த சந்தானத்தை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அஞ்சலி வேற ஒரு படத்திற்கு தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறியிருந்தார், நியாயமாக பார்த்தால் இந்த படத்தில் அவருக்கு கொடுத்தாலும் கொடுக்கலாம் நடிப்புக்காக அல்ல அழகுக்காக.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம்.

ஒளிப்பதிவு ரிஸ்க் எடுக்காமல் வின்னர் படத்திற்காக எந்த லொகேஷனை தேர்வு செய்தார்களோ, அதே லொகேஷனிலேயே படத்தை முடித்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

விஷாலின் அதிரடி சண்டை காட்சிகள் இந்த படத்தில் கூடுதல் பலம். உடல்நிலை சரியில்லாத விஷால் இந்த படத்தை பார்க்கும் பொழுது உற்சாகமாகி எழுந்து வருவார் என்று நம்பலாம்.

ஒருவேளை இந்தப் படம் 12 வருடங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆகி இருந்தால் வரலட்சுமி தான் மிகப்பெரிய நடிகை ஆகி இருந்திருப்பார் என்றே தோன்றுகிறது.

ஆக மொத்தத்தில் எம்ஜிஆர் படம், எப்படி 16 வயதினிலே படத்தின் மூலம் அனைவரும் பெரிய நடிகர்களாக ஆனார்களோ, அதேபோல் இந்தப் படத்தில் இருப்பவர்கள் அனைவரும் மீண்டும் கம் பேக் கொடுத்து பெரியவர்களாக ஆவார்கள் என்பது உறுதி.