சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், கருணாகரன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
ஒரு விபத்தினால் இரண்டு வருட நினைவை இழந்த சித்தார்த், கருணாகரனின் நட்பால் பெங்களூருக்கு செல்கிறார். அங்கு ஆஷிகா ரங்கநாத்தை பார்த்ததும் காதலிக்கிறார். காதலை தன் அம்மாவிடம் சொல்லி அந்த போட்டோவை காட்டும் பொழுது, அம்மா பதறிப் போகிறார். சித்தார்த்தின் நண்பர்களையும் அழைத்து காட்ட, அனைவரும் இந்த பொண்ணு வேண்டாம் என்று கூறுகின்றனர். ஏன் என்று சித்தார்த் கேட்க அதற்கு மலுப்புகின்றனர். அப்படி என்னதான் நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை கரு!
இந்தப் படத்தின் கதை, ஆங்கிலத்தில் வெளியான, ” The eternal Sunshine of the spotless mind ” என்ற படத்தின் தழுவலைப் போலவே உள்ளது.
இந்த ஆங்கில படத்தின் கதை கருவை தமிழ் படத்திற்கு ஏற்றது போல் இயக்குனர் மாற்றி இருக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது!
சித்தார்த் ஆசிக்காரங்கநாத் கருணாகரன் அனைவரும் நடிப்பில் பின்னி எடுத்துள்ளனர்.
நியாயமாக பார்த்தால் கருணாகரனின் நடிப்பு ஒரு படி மேலே உள்ளது என்று சொல்ல வேண்டும்.
ஜிப்ரானின் இசையில் மருகுபா பாடல் மனதை மயக்க வைக்கிறது. மற்றபடி அனைத்தும் சுமார் ரகம். குறிப்பாக பின்னணி இசையில் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் இசை எல்லாம் போடுகிறார்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மிக மிக அற்புதமாக உள்ளது. காதல் படம் என்ற ரசனை என்னால் அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளனர் என்று சொல்லலாம்.
முதல் பாதி வழக்கமான கதையாக தோன்றியதால் முதல் அரை மணி நேரம் சலிப்பை கொடுக்கிறது. இரண்டாவது பாதி விறுவிறுப்பாக சென்றாலும் கிளைமாக்ஸ் முடிந்ததற்கு பிறகும் மறுபடியும் இன்னொரு படம் ஆரம்பிக்கிறது. அது தேவையில்லை என்று தோன்றுகிறது.
ஆக மொத்தத்தில் மிஸ் யூ படம் ஒரு light hearted படம். குடும்பத்துடன் சென்று ஒரு தடவை பார்க்கலாம்.