விடாமுயற்சி படத்துக்கு வந்த அடுத்த சிக்கல்?

2024ம் ஆண்டில் பொங்கலுக்கு அஜீத்குமார் படம் எதுவும் வரவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 2025ம் ஆண்டு பொங்கலுக்கு அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் வெளியாவதாக, டீசருடன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதனால் இந்த ஆண்டு தல பொங்கல்தால் என்று அஜீத்குமார் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். 2 ஆண்டுகளில் விஜய் நடித்த லியோ, தி கோட் என 2 படங்கள் வெளியான நிலையில், அஜீத்குமார் படம் ஒன்றும் வெளியாகாத நிலையில் ஏகே ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் இருந்தனர். இப்போது பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் குறித்த உறுதியான தகவலால் குஷியாக இருந்தனர்.

ஆனால் இப்போது விடாமுயற்சி படத்துக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் வெளியான பிரேக் டவுன் என்ற படத்தின் கதையை தழுவிதான், விடாமுயற்சி படத்தை உருவாக்கி உள்ளனர். பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்தான் விடாமுயற்சி என்பது ஆரம்பத்தில் இருந்தே பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான முறையான அனுமதியை லைகா நிறுவனம் வாங்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

வழக்கமாக இதுபோன்ற ஹாலிவுட் அல்லது பிற படங்களின் கதைகளை தழுவி படம் எடுக்கும் போது அந்த படத்தை தயாரித்த நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற்று, அதற்கான விலையை கொடுத்து விட வேண்டும். அப்படி செய்யாமல் ஒரு படத்தின் கதையை காப்பியடித்தால் அது சட்டரீதியாக நிறைய சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.

இந்த சூழலில், பிரேக் டவுன் ஹாலிவுட் படத்தின் கதை தான் விடாமுயற்சி என்ற தகவல், அந்த ஹாலிவுட் படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ரூ. 150 கோடி கேட்டு, படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் இந்த கதையை அஜீத்குமாரோ, இயக்குனர் மகிழ் திருமேனியோ செலக்ட் செய்யவில்லை. அதனால் அவர்களிடம் இதற்கான தொகையை கேட்க முடியாது.

இந்த பிரேக் டவுன் கதையை தேர்வு செய்தது லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்தான் என்பதால், இப்போது அந்த படத்தை தயாரித்து ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 150 கோடி தர வேண்டிய சிக்கலில் லைகா தவிக்கிறது. படம் துவங்கும் முன் உரிமம் கேட்டிருந்தால், குறைந்த விலைக்கு வாங்கியிருக்கலாம். இப்போது படம் நிறைவடைந்த நிலையில், செக் வைத்துள்ள அந்த தயாரிப்பு நிறுவனத்தால் ரூ. 150 கோடி தரும் நெருக்கடிக்கு லைகா நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதனால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது