அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா.
சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது.
மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
𝐔/𝐀 it is!! #Pushpa2TheRuleOnDec5th pic.twitter.com/jPZuMaRK56
— Allu Arjun (@alluarjun) November 28, 2024
இப்படம் 3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது. அதில் முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை படக்குழு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.