சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’, ரிலீஸ் ஆன முதல் நாளே தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களையே சந்திதது.
படம் வெளியாவதற்கு முன்னரே இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் ‘கங்குவா’ இருக்கும் என்று ஓவர் பில்டப் கொடுத்த நிலையில், படம் பலத்த அடிவாங்கியது சூர்யாவை மட்டும் அல்ல ஒட்டுமொத்த படக்குழுவினரையும் அசைத்து பார்த்தது.
ஏற்கனவே அடுத்தடுத்த தோல்வி படங்களால் பெருத்த நஷ்டத்தை சந்தித்து கொண்டிருந்த ஞானவேல் ராஜா தலையில் இந்த படமும் இடையை இறக்கியது. ரூ.350 கோடி பட்ஜெட்டுல் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.120 கோடிக்கும் குறைவான வசூலை மட்டுமே பெற்றுள்ளது. ‘கங்குவாவின்’ மாபெரும் தோல்வியால் சூர்யா தற்போது மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார் என கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வருடமாக மும்பையை கதி என இருந்த ஜோதிகா நிலையில், மன அமைதிக்காக தமிழக கோவில்கள் பக்கம் வர துவங்கியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சூர்யா – ஜோதிகா இருவரும் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நிலையில் , இன்று காலை ஜோதிகா திருப்பதி திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
ஜோ இப்படி கோவில் கோவிலாக சென்று வர காரணம் சூர்யா தானாம். சிங்கம் 2 படத்துக்கு பின்னர் முட்டி… மோதி பார்த்தும் இவரால், வெற்றிப்படத்தை கொடுக்க முடியாத நிலையில்… குடும்ப ஜோதிடர் கூறிய சில கோவில்களுக்கு தான் இருவரும் சென்று வருவதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இப்படி வெளியாகும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சந்தேகமே.